கனடா வரலாற்றில் முதல் முறையாக நீதி அமைச்சராக யாழ்ப்பாண தமிழர் !
கனடா வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் பிறந்தவரான ஹரி ஆனந்தசங்கரி (gary anandasangaree) நீதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
இலங்கையின் மூத்த தமிழ் அரசியல்வாதியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்த சங்கரியின் இளைய புதல்வரே ஹரி ஆனந்தசங்கரி (gary anandasangaree) ஆவார்.

இலங்கைவாழ் தமிழர்களுக்கு பெருமை
இலங்கையில் இருந்து தனது 13 ஆவது வயதில் புலம்பெயர்ந்து கனடா சென்றார்.
கனடாவில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் வன்முறைகளை தீர்த்து வைக்கும் வகையில், கனடாவில் இளைஞர்கள் சேவை நிலையமொன்றை ஆரம்பித்ததுடன், கனடா தமிழ்ச் சங்கத்தின் செயற்பாடுகளிலும் அவர் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந் நிலையில், கனடாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஒன்டாரியோ மாகாணத்தில் ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக ஹரி ஆனந்தசங்கரி (gary anandasangaree) லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகியிருந்தார்.

You must be logged in to post a comment.