Cinema

கமல்ஹாசன் சொன்ன வார்த்தைதான் எனது வளர்ச்சிக்கு காரணம் ராணி முகர்ஜி தெரிவிப்பு!

நடிகை ராணி முகர்ஜி திரைத்துறையில் என்ட்ரி கொடுத்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் கலைத்துறையில் தனது வளர்ச்சிக்கு நடிகர் கமல்ஹாசன் உட்பட பல உச்ச நட்சத்திரங்கள் சொன்ன வார்த்தைதான் காரணம் என தெரிவித்துள்ளார் அவர்.

‘இந்தியா டுடே’ பத்திரிகை நிறுவனத்திற்கு பேட்டி கொடுத்த போது அதனை பகிர்ந்துள்ளார் அவர்.

“நான் நடிகையாக உருவெடுப்பேன் என ஒருபோதும் எண்ணியதில்லை. எனக்கு முன்னதாக என்னை நடிகையாக்க வேண்டுமென விரும்பியது எனது அம்மா தான். அவர் வற்புறுத்தியதன் பேரில்தான் எனது முதல் திரைப்படத்தில் நடித்திருந்தேன். நாயகியாக நடிக்க எனக்கு எந்த தகுதியும் இல்லை. எனது குரல், உயரம் என அனைத்தும் நாயகியாக ஒருவர் எப்படி இருக்க கூடாது என்பதற்கு பொருத்தமானதாக இருக்கும். ஸ்ரீதேவி, மாதுரி, ஜூஹி மற்றும் ரேகா மாதிரியான மூத்த நடிகைகளை பார்த்து வளர்ந்தவள் நான்.

திரையில் நடிகையாக எனது பயணம் தொடங்கியதும் நிறைய உச்ச நட்சத்திரங்களுடன் பேசும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. அதில் நடிகர் கமல்ஹாசனும் ஒருவர். ‘தொழில் ரீதியாக உங்களை நீங்கள் எப்படி வளர்த்துக் கொள்கிறீர்கள் என்பதை பொறுத்து தான் நீங்கள் அடையும் உயரம் மற்றும் வெற்றியும் இருக்கும்’ என சொல்லி இருந்தார்.

அதனால் வழக்கமாக ஒரு நாயகி கடைப்பிடிக்கின்ற அனைத்து மரபுகளையும் உடைத்தேன்” என தெரிவித்துள்ளார் நடிகை ராணி முகர்ஜி.

நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை ராணி முகர்ஜி,  ‘ஹே ராம்’ திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

தகவல் : இந்தியா டுடே

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading