Local

கம்பஹா மாவட்டத்தில் மாலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு!

கம்பஹா மாவட்டத்தில் மேலும் 12 பொலிஸ் பிரிவுகளில் இன்று மாலை 6 மணி முதல் மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

ஊரடங்கு காலப்பகுதியில் வீட்டுக்குள் இருங்கள்….
வெளிப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம், வெளியில் இருப்பவர்கள் மேற்படி பொலிஸ் பிரிவுகளுக்கு வரவேண்டாம்….
வெளிமாவட்டங்களில் இருந்துவரும் பஸ்கள் இப்பகுதிகளில் பயணிகளை ஏற்றுவதற்கு, இறுக்குவதற்கு தடை…..
கம்பஹா நிர்வாக மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களில் ரயில்களும் நிறுத்தப்படாது…..

கம்பஹா, கிரிதிவெல, தொம்பே, பூகொட, கனேமுல்ல ,வீரகுல, வெலிவேரிய, மல்வத்துஹிரிபிட்டி, நிட்டம்புவ, மீரிகம, பல்வேவெல, யக்கல ஆகிய பொலிஸ் பிரிவுகளிலேயே ஊரடங்கு அமுலில் இருக்கும்.

கம்பஹா மாவட்டத்தில் திவுலப்பிட்டிய, மினுவாங்கொட, வெயாங்கொட ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஏற்கனவே ஊரடங்கு அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading