Local

கர்ப்பிணி தாய்மாரே அவதானம்! தலைதூக்குகிறது இன்புளுவென்சா

இன்புளுவென்சா தொற்று பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் பிரியந்த கருணாரத்ன தெரிவித்தார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களில் 73 பேர் இன்புளுவன்சா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதேவேளை, கர்ப்பிணி தாய் அல்லது குழந்தை பிரசவித்த தாய் ஒருவர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து அரச, தனியார், வைத்தியசாலைகளுக்கும் சுகாதார சேவை அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading