Local

கொலைகாரர்கள் இராணுவ சீருடை அணிவதால் தப்பக்கூடாது – அமைச்சர் மனோ வலியுறுத்து

” கொலைகாரர்கள் இராணுவ, மத சீருடை அணிவதால் தப்பக்கூடாது. இந்த முட்டாள் சிந்தனையாலேயே தமிழருக்கு இந்நாட்டில் நீதி கிடைக்கவில்லை.” என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோ கணேசன் இன்று ( 23) தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கீழ்வருமாறு பதிவிட்டுள்ளார் அமைச்சர் மனோ.

” 2/தமிழருக்கு ஒன்று, சிங்களவருக்கு இன்னொன்று என்ற இரட்டை நீதி, இந்நாட்டில் நல்லிணக்கத்தை கொல்கிறது என்பதை துறைசார் அமைச்சர் என்ற முறையில் கூறுகிறேன்.

கொலைகாரர்கள் இராணுவ, மத சீருடை அணிவதால் தப்பக்கூடாது. இந்த முட்டாள் சிந்தனையாலேயே தமிழருக்கு இந்நாட்டில் நீதி கிடைக்கவில்லை.

தமிழ் மாணவர்களை கடத்தி கொன்ற கொலைகார்கள், இராணுவ சீருடை அணிவதால், போர் நாயகர்களாக முடியாது.

அப்படியாயின், 1970களில் தென்னிலங்கையில் 21 வயது சிங்கள பெண் பிரேமவதி மனம்பேரியை கொன்ற இராணுவனும் “போர் நாயகனாக” வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading