Local

களுத்துறை வீடொன்றில் இருந்து தந்தையும் மகளும் சடலமாக மீட்பு!

களுத்துறை தெற்கு-ஹினட்டியன்கல பகுதியில் வீடொன்றிலிருந்து தந்தையும் மகளும் உயிரிழந்த நிலையில் நேற்றிரவு (30) சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

வீட்டிலிருந்த தாயாரினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தை வீட்டிலிருந்த கதிரையொன்றிலும் மகள் வீட்டு வரவேற்பறையிலும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

69 வயதான தந்தையும் 33 வயதான அவரது மகளுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலங்கள் களுத்துறை-நாகொட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் கொலையா என்பது தொடர்பில் இதுவரை கூறமுடியாதுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading