Gossip

கள்ளக் காதலியின் மகளை கர்ப்பமாக்கிய கள்ளக் காதலன்!

கள்ளக்காதலியின் மகளை கர்ப்பமாக்கிய ரியல் எஸ்டேட் அதிபரின் மகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் ஆவடியை அடுத்த சேர்க்காடு, பள்ளத் தெருவை சேர்ந்தவர் அஸ்வின் (26). இவரின் தந்தை பிரபல ரியல் எஸ்டேட்  தொழிலதிபர். கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் அஸ்வினுக்கும் அதே பகுதியை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணின் கணவன் வெளிநாட்டில் இருப்பதால் இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கம் பின்னாளில்  கள்ளக்காதலாக மாறியது. அந்த பெண்ணுக்கு 13 வயதில் மகள் உள்ளார்.

அஸ்வின் அடிக்கடி கள்ளக்காதலி வீட்டுக்கு வந்துசெல்லும்போது பெண்ணின் மகளிடமும் நெருக்கமாக பழகியதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் பெண்ணின் மகளையும் அஸ்வின் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதன் காரணமாக அந்த  சிறுமி கர்ப்பமானார். இதுபற்றி தெரியவந்ததும் சிறுமியின் தாய் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்படி, ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரித்து வந்தனர். ‘’ஆசை வார்த்தை கூறி சிறுமியை பலமுறை பாலியல்  பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அஸ்வினை போலீசார் தேடி வருகின்றனர்.கள்ளத் தொடர்பு வைத்திருந்த பெண்ணையும் அவரது மகளையும் தொழிலதிபர் மகன்  பாலியல் பலாத்காரம் செய்தது ஆவடி பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading