Gossip

கள்ளக் காதலுக்கு இடையூறு மாமியாரை கொன்ற மருமகன்!

திருப்பத்தூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமியாரை கழுத்தை நெரித்துக்கொன்ற மருமகள் மற்றும் அவரது கள்ளக்காதலன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே உள்ள செவ்வாத்தூர் புதூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (58). இவரது மனைவி ராமரோஜா (50). இவர்களது மகன் ஏழுமலை (25). இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குனிச்சி பகுதியை சேர்ந்த அம்சா (21) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. ஏழுமலை சென்னையில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த புதன் கிழமை இரவு செல்வராஜ் வேலைக்கு புறப்பட்டு சென்ற நிலையில், ராமரோஜா வீட்டின் வெளியே படுத்து தூங்கியுள்ளார்.

அம்சாவும், குழந்தைகளும் வீட்டிற்குள் படுத்து தூங்கியுள்ளனர். மறுநாள் காலையில் ராமரோஜா கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கந்திலி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். சந்தேகத்தின் பேரில் ராமரோஜாவின் மருமகள் அம்சா மற்றும் பெரிய குனிச்சியை சேர்ந்த அவரது உறவினர் கார்த்திகேயன் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், பள்ளி பருவத்தில் இருந்து இருவரும் காதலித்து வந்ததும், ஆனால் அம்சாவின் பெற்றோர் அவரை ஏழுமலைக்கு திருமணம் செய்து வைத்ததும் தெரிய வந்தது. திருமணத்திற்கு பின்னும் அம்சாவும், கார்த்திகேயனும் கள்ளத்தொடர்பை தொடர்ந்து வந்துள்ளார். இதனை அறிந்த மாமியார் ராமரோஜா, அவரை கண்டித்து கள்ளத்தொடர்பை கைவிடும்படி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அம்சா, கள்ளக்காதலன் கார்த்திகேயன் மற்றும் அவரது சகோதரரான 17 வயது சிறுவன் ஆகியோர், கம்பியால் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது.

இதனை அடுத்து, கந்திலி போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் கார்த்திகேயன், அம்சா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அத்துடன், சிறுவனை கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading