Local

கள்ளக் காதல் மரணத்தில் முடிந்தது!

கிரிபத்கொடை பகுதியில் நேற்றிரவு (07) கள்ள காதல் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

முந்தலம பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் நேற்றிரவு கிரிபத்கொட பகுதியில் வைத்து குறித்த பெண்ணை கத்தியால் குத்தியுள்ளார்.

சந்தேக நபர் பின்னர் அருகிலுள்ள கட்டிடத்தின் மேல் மாடியில் ஏறி, மற்றொரு கட்டிடத்தின் கூரையில் அதன் வழியாக நடந்து செல்லும் போது உயர் மின்னழுத்த மின் கம்பியில் தொங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கத்தியால் குத்துக்கு இலக்கான பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading