Cinema

‘காஞ்சனா 4’ இல் களமிறங்கும் பொலிவுட் நடிகை

ராகவா லோரன்ஸ் இயக்கி நடித்து, கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காஞ்சனா. இப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு காஞ்சனா 2 மற்றும் 2019 இல் காஞ்சனா 3 என அடுத்தடுத்த பாகங்கள் இயக்கப்பட்டு வெளிவந்தன.

வெறுமனே பயத்தை மட்டுமல்லாமல் பார்ப்பவர்களை சிரிக்க வைக்ககும் நகைச்சுவையும் படத்தில் இருப்பதால் இது குடும்ப ரசிகர்களின் விருப்பத் தெரிவாக இன்றளவும் உள்ளது.

அதன்படி காஞ்சனா 4 இற்கான கதையை எழுதி வருவதாகவும் விரைவில் அதற்கான படப்பிடிப்பு பணிகள் தொடங்க இருப்பதாகவும் அண்மையில் பேட்டியொன்றில் லோரன்ஸ் கூறியிருந்தார்.

கதாநாயகியாக பூஜா ஹெக்டே இப் படத்தில் நடிக்கவுள்ளமை ஏற்கனவே தெரிந்த விடயம். தற்போது பொலிவுட் நடிகை நோரா பதேகியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் இப் படம் தொடர்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என காஞசனா ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading