Gossip

காதலிக்கு திருமண ஏற்பாடு காதலன் செய்த மோசமான செயல்

காதலிக்கு திருமண ஏற்பாடு நடந்த நிலையில், அவரைப் பழி வாங்குவதற்கு காதலன் ஒருவர் அடித்து ஒட்டிய போஸ்டர்கள் பேரதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியைச் சேர்ந்தவர் மனோஜ் குமார். இவர் அருகில் உள்ள சலோன் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்து வந்த நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர்.
பின்பு குறித்த பெண்ணிற்கு பெற்றோர்கள் வழக்கறிஞர் ஒருவரை மாப்பிள்ளையாக பார்த்து, நிச்சயம் செய்துள்ளனர். இதனை அறிந்த மனோஜ் கோபத்தில் தனது முன்னாள் காதலியான மணப்பெண்ணை பழிவாங்க திட்டமிட்டுள்ளார்.
பின்பு காதலியும், தானும் ஒன்றாக இருப்பது போன்று புகைப்படங்களை மார்ஃபிங் செய்து அதில் ஹோலி வாழ்த்து கூறி அந்த பெண் வசிக்கும் பகுதியில் போஸ்டராகவே ஒட்டியுள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் தந்தை பொலிசில் புகார்அளித்ததையடுத்து, பல்வேறு பிரிவுகளில் மனோஜ் மீது வழக்கு பதிவுசெய்து அவரைக் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading