Local

காதலித்த காரணத்தினால் 14 வயது சிறுமி அடித்துக் கொலை!

கம்பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மவுன்ட்டெம்பல் பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிபுனி நுவந்திகா பண்டார என்ற 14 வயதுடைய பாடசாலை சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையும், சிறியதந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காதல் விவகாரம் காரணமாக சிறுமியின் சிறியதந்தை நேற்றைய தினம் அவரை தாக்கியுள்ளார்.

அதன்பின்னர் நேற்று காலை சிறுமி உடல்நிலை சரியில்லாமல் புலம்பிய போது, சிறுமியின் தந்தை மீண்டும் தாக்கியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

பின்னர் சிறுமியை அவரது தாயார் அருகில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், இதனை அடுத்து மயக்கமடைந்த சிறுமி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading