Cinema

காதலியுடன் விரைவில் திருமணம் நடிகர் விஷால் அறிவிப்பு!

காதலியை விரைவில் கரம் பிடிப்பேன் என நடிகர் விஷால் கூறினார். நடிகர் விஷாலுக்கு 45 வயதாகிறது. இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இவருக்கும் ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. சில காரணங்களால் அந்த நிச்சயதார்த்தம் முறிந்தது. இந்நிலையில் நடிகை அபிநயாவை விஷால் காதலிப்பதாக சில நாட்களாக தகவல் பரவியுள்ளது.

இதை விஷால் மறுக்கவில்லை. ஆனால் அபிநயா தரப்பில் இதற்கு மழுப்பலான பதில் கூறப்பட்டது. இந்நிலையில் ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், ‘எனக்கு காதலி இருக்கிறார். அவரை உலகத்துக்கு அறிமுகப்படுத்துவேன். விரைவில் எனது திருமணம் குறித்த அறிவிப்பும் வெளியாகும்’ என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading