காதலியை பார்க்க கள்ளப் படகில் இலங்கை வந்த 17 வயது சிறுவன்.!
இப்படி ஒரு காதலா..😂😂 தனது பேஸ்புக் காதலியை பார்க்க கள்ளப் படகில் இலங்கை வந்த 17 வயது சிறுவன்.!
பேஸ்புக் மூலம் அறிமுகமான இலங்கையை சேர்ந்த தனது காதலியைச் சந்திப்பதற்காக, இந்தியாவிலிருந்து கடல் வழியே இலங்கைக்கு வந்த 17 வயது இந்தியச் சிறுவன் ஒருவனை இலங்கை கடற்படையினர் மன்னாரில் கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் பள்ளிக் கல்வியை நிறுத்திவிட்டு மீன்பிடித் தொழில் செய்து வரும் 17 வயது சிறுவன் ஒருவனுக்கு, பேஸ்புக் தளத்தின் மூலம் இலங்கை -கிளிநொச்சி பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவருடன் காதல் மலர்ந்துள்ளது.
காதலியின் அழைப்பை ஏற்று அவளை நேரில் சந்திக்க இலங்கை வர அச்சிறுவன் திட்டமிட்டுள்ளான்.
ஆனால், சட்டவிரோதப் படகுப் பயணத்திற்குத் தேவையான பண வசதி அவனிடம் இருக்கவில்லை. இதனால், தான் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் படகோட்டியிடம் கட்டணமாகக் கொடுத்துப் பயணமாகியுள்ளான்.
இலங்கைக்கு அழைத்து வந்த படகோட்டி, அச்சிறுவனை தலைமன்னார் கடற்படை முகாமிற்குட்பட்ட ஆதாமின் பாலம் பகுதியிலுள்ள 6-வது மணல் திட்டில் தனியாக இறக்கிவிட்டு, மீண்டும் இந்தியாவிற்குத் தப்பியோடியுள்ளான்.
அப்பகுதியில் வழக்கமான கடல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மன்னார் கடற்படை அதிகாரிகள், மணல் திட்டில் தனியாக நின்றிருந்த சிறுவனைக் கண்டு சந்தேகமடைந்து அவனைக் மீட்டனர்.
சிறுவனை கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் தலைமன்னார் நீதிமன்றம் குறித்த சிறுவனை சிறுவர்கள் காப்பாகத்தில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
”முன்பின் தெரியாத நபர்களுடன் இணையத்தில் பழகும்போது எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக எல்லை தாண்டுவது உயிருக்கே ஆபத்தாக முடியலாம்”

You must be logged in to post a comment.