Gossip

காதலியை 35 ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம் செய்த 65 வயது காதலன்!

கர்நாடகாவில் 35 ஆண்டுகளுக்கு பிறகு 65 வயது முதியவர் காதலியை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் தேவாரமுத்தனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சிக்கண்ணா என்பவரும், ஜெயம்மா என்பவரும் இளம் வயதில் காதலித்து வந்துள்ளனர். ஆனால், ஜெயம்மாவின் பெற்றோர்கள், கூலி வேலை செய்து வந்த சிக்கண்ணாவுக்கு தனது மகளை திருமணம் செய்து கொடுக்க விரும்பவில்லை. 

மாறாக, அக்கம்பக்கத்தில் உள்ள வேறொருடன் ஜெயம்மாவுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் மனம் உடைந்த சிக்கண்ணா அருகிலுள்ள கிராமத்துக்கு சென்று கூலி வேலை செய்து வந்துள்ளார். 

இந்த நிலையில், பல வருடங்கள் கழித்து ஜெயம்மா தனது கிராமத்துக்கு வந்தபோது, ​​கணவனை விட்டுப் பிரிந்து மகனுடன் வாழ்ந்து வருவது சிக்கண்ணாவுக்கு தெரியவந்துள்ளது. சிக்கண்ணா திருமணம் செய்துகொள்ளாமலேயே காதலியின் நினைவிலேயே வாழ்ந்து வந்துள்ளார். 

இதையடுத்து, ஜெயம்மாவை சந்தித்து பேசிய சிக்கண்ணா, தன்னுடைய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார். 35 ஆண்டுகளுக்கு பிறகு தனது காதலியை கரம் பிடித்துள்ளார் முதியவர் சிக்கண்ணா.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading