World

காய்ச்சலுக்கு மந்திரவாதியிடம் ஆலோசனை கேட்ட பெற்றோர் பரிதாபமாக உயிரிழந்த சிறுமி!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் சிற்றி பகுதியை சேர்ந்தவர் அப்துல் சத்தார். அவரது மகள் பாத்திமா (11). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். சத்தாருக்கு மந்திரவாதத்தில் அதிக நம்பிக்கை உண்டு. கடந்த 3 நாட்களுக்கு முன்பு பாத்திமாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் ஒரு மந்திரவாதியை சந்தித்து ஆலோசனை கேட்டுள்ளார்.

இருப்பினும் காய்ச்சல் குணமாகவில்ைல. இந்த நிலையில் நேற்று இரவு பாத்திமாவின் உடல் நிலை மோசமானது. அதன் பிறகு கண்ணூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பாத்திமா பரிதாபமாக இறந்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading