Local

காலையில் வெளியிட்ட வர்த்தமானி
மாலையில் இறத்து செய்யப்பட்டது!

நிதியமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்வதற்கான உத்தரவினை மேலிடத்திலிருந்து தனக்கு கிடைத்ததாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டு பணிப்பாளர் நாயகம் தயமந்தி எஸ். தருணாரத்ன தெரிவித்துள்ளார்.

எவரால் இந்த உத்தரவு தனக்கு கிடைத்தது என்கிற மேலதிக தகவல்களை வெளியிடவும் அவர் மறுப்பு தெரிவித்திருக்கின்றார்.

தனியார் தொலைக்காட்சியுடன் நடத்தப்பட்ட நேர்காணலில் கலந்துகொண்டபோது அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

குளியலறை டைல் உற்பத்திகள் மீதான இறக்குமதிக் கட்டுப்பாட்டை தளர்த்துவதற்காக நிதியமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ச வழங்கிய உத்தரவுக்கு அமைய நேற்று வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியது.

ஆனால் நேற்று மாலை மீண்டுமொரு வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியதுடன், அதில், குறித்த தடைநீக்கல் வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading