World

கால் தடுக்கி கீழே விழுந்த அமெரிக்கா ஜனாதிபதி பைடன்!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கொலராடோ மாநிலத்தில் உள்ள விமான படை கழகத்தில் மேடையில் கால் தடுக்கிக் கீழே விழுந்துள்ளார்.

கழகத்தின் பட்டதாரிகளுக்கு உரையாற்றிய பின்னர், தமது இருக்கைக்குத் திரும்பிச் செல்லும் வழியில் 80 வயதான பைடன் கீழே விழுந்துள்ளார்.

இதன் போது விமான படை வீரர் ஒருவர் அவரைத் தூக்கிவிட்டார். மேடையில் இருந்த சிறிய மணல் மூட்டை அவரைத் தடுக்கிடச் செய்ததாக வெள்ளை மாளிகையின் தொடர்பு இயக்குநர் தெரிவித்துள்ளார்.

அவர் தமது Twitter பக்கத்தில் இதனை குறிப்பிட்டார். பைடன் நலமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்க வரலாற்றிலேயே பைடனே ஆக வயதான ஜனாதிபதியாகும். அவர் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடவுள்ளார்.

அவர் உடல் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அடிக்கடி உடற்பயிற்சி செய்வதாகவும் அவரின் அதிகாரபூர்வ மருத்துவர் தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading