காஸாவில் ஒரே மாதத்தில் 6,745 குழந்தைகள் பிறப்பு
🇵🇸 காஸாவில் ஒரே மாதத்தில் 6,745 குழந்தைகள் பிறப்பு! – 2026ஆம் ஆண்டின் அதிகபட்ச மாதாந்த பிறப்பு எண்ணிக்கை பதிவு!
போர் மற்றும் கடுமையான மனிதாபிமான நெருக்கடிகளுக்கு மத்தியில், காஸா பகுதியில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் 6,745 குழந்தைகள் பிறந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சின் சுகாதாரத் தகவல் பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி, ஒக்டோபர் மாதத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 218 குழந்தைகள் பிறந்துள்ளன. இது 2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவான அதிகபட்ச மாதாந்த பிறப்பு எண்ணிக்கையாகும்.
பிறந்த குழந்தைகளில் 33 சதவீதமானவை தாய்மார்களின் முதல் பிரசவங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஒக்டோபர் மாதத்தில் குழந்தைகளின் பிறப்பு எண்ணிக்கை 3.6 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
2026 ஜனவரி மாதத்தில் 5,204 குழந்தைகள் பிறந்திருந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் இந்த எண்ணிக்கை 2,004 ஆகக் குறைந்தது. பின்னர் படிப்படியாக அதிகரித்து ஒக்டோபர் மாதத்தில் 6,745 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து நீடிக்கும் போர், இடம்பெயர்வு மற்றும் சுகாதாரக் கட்டமைப்புகளின் பாதிப்புகளுக்கு மத்தியிலும் காஸாவில் பிறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment.