Local

கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமியின் மரணத்திற்கான காரணம் வெளியானது!

வவுனியா – கணேசபுரத்தில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட மாணவி நீரில் மூழ்கியதால் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனையில் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவியின் சடலம் மீதான பிரேத பரிசோதனை வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது, இந்த விடயம் உறுதி செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என்பதும் பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கணேசபுரம் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த 16 வயதுடைய மாணவியின் சடலம் நேற்று முன்தினம் இரவு குறித்த பகுதியில் உள்ள பாலடைந்த கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது.

மேலதிக வகுப்பிற்கு சென்ற மாணவி காணாமல் போயிருந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் மாணவியின் சடலம் மீட்கப்பட்டது.

இந்த நிலையில், மாணவியின் சடலம் உறவினர்களிடம் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading