LocalUp Country

குகைக்குள்ளிலிருந்து இளைஞர்களின் சடலங்கள் மீட்பு! அச்சத்தில் ராகலை!!

நுவரெலியா – ராகல பகுதியில் குகையொன்றிலிருந்து இரண்டு இளைஞர்களின் சடலங்கள் இன்று (16) மீட்கப்பட்டுள்ளன.

ராகல – சென்லேனாட்ஸ் பகுதியைச் சேர்ந்த  31 வயதான செல்லையா அசோக் குமார் மற்றும் 29 வயதான மகேஷ்வரன் ரத்னேஷ்வரன் ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் மிருகங்களை வேட்டையாடுவதற்காக நேற்று (15) சென்றிருந்த நிலையில், அவர்கள் காணாமல்போயிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்களுடன் சென்ற நாயின் உடலும் குகைக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு இளைஞர்கள் மிருகமொன்றை வேட்டையாடுவதற்காக குகைக்குள் புகை பிடித்துள்ளதுடன், அதனைத் தொடர்ந்து இருவரும் குகைக்குள் சென்றுள்ளமையும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading