World

குடும்பத்துடன் லண்டனில் குடியேற முகேஷ் அம்பானி முடிவு?

இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி லண்டனில் குடிபெயர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் அது குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவருமான முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான வீடான மும்பை ஆன்டாலியாவில் வசித்து வரும் நிலையில், தற்போது லண்டனில் வசிக்க உள்ளதாக மிட் டே பத்திரிக்கை செய்தி வெளியிட்டது.

பிரித்தானியாவின் பக்கிங்ஹாம்ஷயர் பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் ஸ்டோன் பார்க்-ஐ முகேஷ் அம்பானி சமீபத்தில் ரூ. 592 கோடிக்கு விலைக்கு வாங்கினார்.

இந்தக் கட்டிடத்தில் 49 பிரம்மாண்ட பெட்ரூம் உடன் பல வசதிகள் உள்ளது. பொதுவாக முகேஷ் அம்பானி தீபாவளி பண்டிகையைத் தனது குடும்ப உறுப்பினர்களோடு மும்பை ஆன்டிலியாவில் தான் கொண்டாடுவார், ஆனால் முதல் முறையாக முதல் வெளிநாட்டில் தீபாவளியை ஸ்டோன் பார்க்-ல் கொண்டாடியுள்ளார்.

ஓராண்டில் இந்தியாவில் பாதி நாட்கள், லண்டனில் பாதி நாட்கள் இருக்க அம்பானி மற்றும் குடும்பத்தார் முடிவு செய்துள்ளதாக மிட் டே தெரிவித்தது.

இந்த நிலையில் இது தொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. அதில், லண்டனோ அல்லது உலகில் வேறு இடங்களிலோ இடம்பெயரும் திட்டம் முகேஷ் அம்பானிக்கோ அல்லது அவரது குடும்பத்தினருக்கோ இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

லண்டனின் ஸ்டோக் பார்க் எஸ்டேட்டை அண்மையில் ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்தச் சொத்தை ஒரு தலைசிறந்த கோல்ஃப் மைதானமாக்கி, அதை ஸ்போர்டிங் ரிஸார்டாக மாற்ற வேண்டும் என்பதே ரிலையன்ஸ் நிறுவனத்தின் இலக்கு.

இதற்காக உரிய விதிமுறைகளை, உள்ளூர் நடைமுறைகளைப் பின்பற்றி இந்தச் சொத்து வாங்கப்பட்டுள்ளது. இது நிறுவனத்தின் விருந்தோம்பல் தொழிலை உலகளவில் எடுத்துச் செல்ல வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading