Uncategorized

குறட்டையை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம்!

 

‘ஜெய் பீம்‘ படத்தின் நடிகர் மணிகண்டன் கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படத்தின் முதற்பார்வை படம் வெளியாகியிருக்கிறது.

இசையமைப்பாளர் அனிருத் இந்த முதற்பார்வைப் படத்தை வெளியிட்டிருக்கிறார்.

இதன்படி, குறித்த படத்திற்கு ‘குட்நைட்‘ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநரான விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்தத் திரைப்படத்தில், மணிகண்டனுக்கு நாயகியாக மீதா ரகுநாத் நடித்துள்ளார்.

அத்துடன், இயக்குநரும் நடிகருமான பாலாஜி சக்திவேல், பகவதி பெருமாள், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் என்பவர் இசையமைத்துள்ளார்.

அத்துடன், மில்லியன் டொலர் ஸ்ரூடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி. என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் நசரேத் பசிலியான், மகேஷ் ராஜ் பசிலியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து படத்தைத் தயாரித்திருக்கிறார்கள்.

இந்தப் படம் குறட்டையை மையப்படுத்தி உருவாகியிருப்பதுடன், குடும்ப உறவுகளின் முக்கியத்துவமும் தூங்கும்போது ஒருவர் விடும் குறட்டை எவ்வாறு மற்றவர்களைப் பாதிக்கிறது என்பதையும் நகைச்சுவையாகவும், அர்த்தமுள்ள கதையாகவும் உருவாகியுள்ளதாக படத்தின் இயக்குநர் தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading