Local

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால்தான் பொலிஸ்மா அதிபரை பதவி நீக்கலாம்! – பொன்சேகா அதிரடி

“பொலிஸ்மா அதிபரின் பதவியை நீக்க வேண்டும் என்றால் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட வேண்டும்.”

– இவ்வாறு அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

கிரிபத்கொட பிரதேசத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“குற்றம் சாட்டப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் விசேடமான நபர். எனவே அவர் மீது குற்றச்சாட்டுக்கள் இருப்பின் அது தொடர்பில் உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும்.

ஒருபோதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவுடன் ஒருவரைப் பதவியில் இருந்து நீக்க முடியாது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மட்டுமே பதவியில் இருந்து நீக்க முடியும்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading