LocalUp Country

குளிக்கச்சென்ற இந்திய யுவதியை படமெடுத்த வெள்ளவாய இளைஞன்! அதன்பின் நடந்த கொடூரம்!

இந்திய யுவதி, குளியலறைக்கு சென்ற வேளையில், அவரை கையடக்கத் தொலைபேசி ஊடாக படம் எடுக்க முயற்சித்த, உல்லாச விடுதி ஊழியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று ( 10) வெள்ளவாயவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த யுவதியின் சகோதரனே உல்லாச விடுதி ஊழியரை மடக்கிப்பிடித்துள்ளார்.
டானிஸ் கிரமன் என்ற வட இந்திய யுவதி, தனது தகப்பன் மற்றும் சகோதரன் ஆகியோருடன் இலங்கைக்கு உல்லாச பிரயாணிகளாக வந்து, வெள்ளவாயாவிற்கு சென்று, அங்குள்ள உல்லாச விடுதியில் தங்கியிருந்தனர்.
அவ்வேளையில், இந்திய யுவதி, குளியலறைக்கு சென்றுள்ளாள்.
இதனை தருணம் பார்த்திருந்த உல்லாச விடுதி ஊழியர் மறைந்திருந்து, தனது கையடக்கத் தொலைபேசி ஊடாக யன்னல் வழியாக படம் எடுக்க முயற்சித்தார்.
இதனைக் கண்ட இந்திய யுவதியின் சகோதரன், அவ் ஊழியரைப் பிடித்து, நையப்புடைத்து, விடுதி முகாமையாளருக்கும் அறிவித்து விட்டு, அவர் ஊடாக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பொலிசாரினால் கைது செய்யப்பட்ட உல்லாச விடுதி ஊழியர், விசாரணைகளின் பின்னர், வெள்ளவாயா மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென்று, பொலிசார் தெரிவித்தனர்.
பதுளை நிருபர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading