Entertainment

குழந்தைக்கு பாலூட்டியபடி மேக்கப் செய்து கொண்ட பிரபல நடிகை!

தனது குழந்தைக்கு பாலூட்டியபடி படப்பிடிப்பு செல்வதற்கு மேக்கப் செய்து கொண்ட பிரபல பாலிவுட் நடிகையின் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை சோனம் கபூர்

பிரபல பாலிவுட் நடிகையான சோனம் கபூர் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவ என்பவரை கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் குழந்தை பிறந்தது. தங்களது மகனுக்கு வாயு என பெயரிட்டுள்ளார்.

இது குறித்தான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் சோனம் பகிர்ந்திருந்தார். அதோடு குழந்தை பிறந்த இரண்டு மாதத்திற்குள் அவர் தனது பணிக்கு திரும்பி விட்டார்.

குழந்தைக்கு பாலூட்டியபடியே மேக்கப்! பிரபல நடிகை வெளியிட்ட சர்ச்சை காட்சி | Sonam Kapoor Makeup With Breastfeeds Son

சோனம் கபூர் தற்போது ‘பிளைண்ட்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதனை ஷோம் மகிஜா இயக்குகிறார். இந்த படம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதால் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சோனம் கபூர் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சர்ச்சையை கிளப்பி உள்ளது. அந்த வீடியோவில் மேக்கப் குழுவுடன் இருக்கிறார் சோனம். சூட்டிங்கிற்காக தயாராகி வரும் சோனம் தனது குழந்தைக்கு பாலூட்டிய படி அமர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை பகிர்ந்து, “எனது அணியுடன் நிஜ உலகில் திரும்பி வருவது, உடை அணிவது மற்றும் மக்களைச் சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது சொந்த மைதானத்தில் மீண்டும் இருப்பதை விரும்புகிறேன். லவ் யூ மும்பை” என்று எழுதியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading