Local

மஹிந்த”மைனா”என்னை “பொடி மைனா”என்று விமர்சிப்பதாக நாமல் குற்றச்சாட்டு!

மகிந்த ராஜபக்சவால் இலங்கைக்கு இணைய வசதி கொண்டு வரப்பட்டதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
2005ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற போது, நாட்டில் 5% மட்டுமே இணைய வசதி இருந்தது. மகிந்த ராஜபக்சவால் கொண்டு வரப்பட்ட இணைய வசதியால் இளைஞர்கள் இன்று முகநூலில் அதிக நேரம் இருப்பதுடன், இணைய வசதியை கொண்டுவந்த மஹிந்தவை “மைனா” என விமர்சிப்பதுடன் என்னை “பொடி மைனா” என கூறுகின்றனர் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading