World

கைலாசா தீவில் இருந்து ரஞ்சிதா வெளியிட்ட இரங்கல்!

தமிழ்சினிமாவின் பிரபல நடிகையான ரஞ்சிதா, நித்தியானந்தாவின் சீடரான பின்னர், தன் பெயரை ‘மா நித்யானந்த மாயி’ என்று மாற்றிக்கொண்டார். ஒரு தனி தீவில் ‘கைலாசா’ என்ற புதிய நாட்டினை உருவாக்கி வருவதாக தெரிவித்துவருகிறார் நித்தியானந்தா. அத்தீவில்தான் ரஞ்சிதாவும் இருப்பதாக தகவல்.

இந்நிலையில், மறைந்த தமிழ்திரையுலக நடிகர் வெங்கட் சுபாவுக்காக அவர் இரங்கல் தெரிவித்திருக்கிறார். வெங்கட்டின் இழப்பை சொல்ல வார்த்தைகளே இல்லை என்று தெரிவித்திருக்கும் ரஞ்சிதா, வெங்கட் குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.

விஜயகாந்த் நடித்த ‘பூந்தோட்ட காவல்காரன்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானா தயாரிப்பாளர் சிவா. அவரது அம்மா கிரியேஷன்ஸ் தொடர்ந்து அரவிந்தன், சரோஜா, கனிமொழி, அரவான் 20 படங்களை தயாரித்திருக்கிறது. அம்மா கிரியேஷன்சில் தயாரிப்பு மேற்பார்வையாளராக இருந்தவர் வெங்கட். அவர் கொரோனாவால் மரணம் அடைந்தார்.

அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், பிரபல நடிகையாக இருந்த ரஞ்சிதாவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை விருகம்பாக்கத்தில் அம்மா கிரியேஷன்ஸ் அலுவலகத்திற்கு அருகில்தான் ரஞ்சிதாவின் வீடு இருக்கிறது. உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், தனது சினிமாவையும், தன்னுடன் பழகியவர்களையும் தொடர்ந்து கவனித்து வரும் ரஞ்சிதா, வெங்கட் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading