Local

கொடூரமாக கொலை செய்து துண்டிக்கப்பட்ட தலையை எடுத்து சென்ற நபர்!

அக்குரஸ்ஸ, திப்போடுவ பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தனது வீட்டில் வைத்து கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வாளினால் அந்த நபரின் தலை கழுத்திலிருந்து துண்டிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்தக் கொலைச் சம்பவம் இன்று (27) காலை இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவரின் மகளும் மனைவியும் படுகாயமடைந்த நிலையில் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொலையை செய்த 29 வயதுடைய நபர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சந்தேக நபர் உயிரிழந்தவரின் வீட்டை ஒட்டியுள்ள வீட்டில் வசித்து வந்துள்ளதாக துண்டிக்கப்பட்ட தலையை குறித்த நபர் எடுத்துச் சென்றுள்ளதுடன் அதனை நில்வலா கங்கையில் வீசியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொல்லப்பட்ட நபரின் வீட்டில் நேற்று (26) இரவு தொவிலாட்டம் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது கொலையாளியின் பெற்றோர் மீது சூனியம் செய்யப்பட்டதாக கூறி குறித்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 59 வயதுடைய நபர் கொலை செய்யப்பட்டுள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading