Local

அமீரகத்தில் வேலையின்றி யாசகம் எடுக்கும் இலங்கை இளைஞர்கள்!

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு தொழில் நிமித்தம் சென்ற பெருமளவிலான இலங்கை இளைஞர்கள் வேலையின்றி அல்லாடுவதாகத் தெரிய வருகிறது.

இவர்களில் பலர் சுற்றுலா விசாவில் அமீரகம் சென்றுள்ளனர்.

எனினும், இவ்வாறான பெருமளவு இலங்கையர்கள் பல மாதங்களாக வேலை வாய்ப்பின்றி யாசகம் எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு நிறுவனங்களால் ஏமாற்றப்பட்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பல்வேறு மாகாணங்களுக்கு சுற்றுலா விசாவில் ரூ.4-5 லட்சம் வரை செலவு செய்து சென்றுள்ளதாகத் தெரிய வருகிறது.
ஆனால், பல மாதங்களாக வேலையின்றி வெயிலில் பட்டினியுடன் வீதிகளில் நடந்து செல்கின்றனர்.

வேலைவாய்ப்பு முகவர்கள் அந்த நாட்டில் சுமார் 500,000 ரூபா சம்பளம் பெறுவது எளிது எனக் கூறி இளைஞர்களை ஏமாற்றி அங்கு அனுப்பியுள்ளதாகத் தெரிய வருகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading