Local

நாளை முதல் நாடு ஸ்தம்பிக்கும்!

நாளை முதல் நாடு ஸ்தம்பிக்கும் என ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளரான ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மூன்று வாரங்கள் கடினமானதாக இருக்கும் எனவும், பயணத்தை மட்டுப்படுத்துமாறும், எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறும் பொதுமக்களை வலியுறுத்தி பிரதமர் ஜூன் 7ஆம் திகதி அறிக்கை ஒன்றை வெளியிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த மூன்று வாரங்கள் நாளையுடன் முடிவடைவதாகவும் , நாட்டில் எரிபொருளோ, எரிவாயுவோ இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜூன் 8 ஆம் திகதி 5,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 3,500 மெட்ரிக் தொன் பெற்றோல் விநியோகிக்கப்பட இருந்ததாகவும், இறக்குமதியின் அளவு 3,500 மெட்ரிக் தொன் மற்றும் 1,500 மெட்ரிக் தொன் பெற்றோலாக குறைந்தது எனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் தேவை 6,000 மெட்ரிக் தொன்களுக்கும் அதிகமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து ஜூன் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் இறக்குமதிகள் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் வரும் என அறிக்கைகள் வெளியிடப்பட்டதாகவும், இறக்குமதிகள் இன்னும் இலங்கைக்கு வந்து சேரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading