World

கொரோனாவால் மூன்று வைத்தியர்கள் தற்கொலை

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. அந்த நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது.இன்று புதிதாக 10,581 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 1,45,268 ஆக உயர்ந்துள்ளது.மேலும் வைரஸ் தொற்றுக்கு இன்று 76 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1,356 ஆக உயர்ந்துள்ளது.
ரஷ்யாவில் கொரோனா நிலைமை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், மருத்துவர்களுக்கே உரிய பாதுகாப்பு இல்லை எனவும் எச்சரித்து மூன்று மருத்துவமனை ஜன்னலில் இருந்து குதித்துள்ளனர்.
தென்மேற்கு ரஷ்யாவின் வோரோனேஜ் நகரில் நோவஸ்மான்ஸ்கயா மாவட்ட மருத்துவமனையில் டாக்டர் அலெக்சாண்டர் ஷுலேபோவ் ஆம்புலன்ஸ் பிரிவில் பணியாற்றி வந்தார். தற்கொலை முடிவை எடுக்கும் முன்னர் தமது சக மருத்துவர் ஒருவருடன் காணொலி ஒன்றை பதிவு செய்த அவர்,தங்களை அதிகமாக வேலை வாங்குவதாகவும், பாதுகாப்பு கருவிகள் ஏதுமின்றி கொரோனா சிகிச்சைக்கு கட்டாயப்படுத்துவதாகவும், தங்களுக்கு கொரோனா உறுதியான பின்னரும் பணியில் தொடர கட்டாயப்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.ஆனால் டாக்டர் ஷுலேபோவ் கூறியது உண்மைக்கு புறம்பானது என கூறி, அவரது சக மருத்துவரிடம் ரஷ்ய போலீசார் விசாரணை மேர்கொண்டுள்ளனர்.
ஷுலேபோவ் தற்கொலைக்கு முயன்றது போலவே இதற்கு முன்னரும் இரண்டு பெண் மருத்துவர்கள், ரஷ்யாவின் கொரோனா பாதுகப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் மருத்துவமனை ஜன்னலில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading