Local

கொரோனா அபாய நிலைமை குறைந்தால் மாத்திரமே பயணக்கட்டுப்பாடு தளர்வு!

சுகாதார நிலைமைகள் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் பட்சத்தில் மாத்திரமே பயணக்கட்டுப்பாட்டை தளர்த்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என  இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் கொரோனா அபாய நிலைமை குறைந்துள்ளமை கண்டறியப்பட்டால் மாத்திரமே பயணக்கட்டுப்பாட்டை தளர்த்துவது  தொடர்பில் ஆலோசிக்கப்படும் எனவும் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்,

நிபுணர்கள் குழுவின் ஆய்வுகளின் அடிப்படையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் தற்போதைய பரிந்துரைகளின் பிரகாரம் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading