World

கொரோனா அமெரிக்காவில் குறைகிறது இந்தியாவில் அதிகரிக்கிறது!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 15 கோடியே 27 லட்சமாக அதிகரித்துள்ளது.சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆணடு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பின் முதல் அலை நிறைவடைந்த நிலையில் பல நாடுகளில் வைரசின் இரண்டாவது அலை அதி வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை புரட்டி எடுத்து வருகிறது.

வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை பயன்பாட்டிற்கு வந்துள்ளன. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில், உலகம் முழுவதும் 15 கோடியே 27 ஆயிரத்து 88 ஆயிரத்து 755 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 95 லட்சத்து 13 ஆயிரத்து 840 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 13 கோடியே 69 ஆயிரத்து 129 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் இதுவரை 32 லட்சத்து 5 ஆயிரத்து 786 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்,

அமெரிக்கா – 3,31,46,008
இந்தியா – 1,91,64,969
பிரேசில் – 1,47,25,975
பிரான்ஸ் – 56,42,359
துருக்கி – 48,49,408…

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading