Local

மேலும் 9 பேர் சாவு! – கொரோனா காவு 687ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 9 பேர் சாவடைந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இன்றிரவு தெரிவித்தார்.

வெவ்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த 8 ஆண்களும், ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.

அவிசாவளை பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயது ஆண், கரந்தன பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயது ஆண், ருவான்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயது ஆண், தேவாலகம பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயது பெண், மாவனெல்லை பிரதேசத்தைச் சேர்ந்த 79 வயது ஆண், யக்வில பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயது ஆண், வலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயது ஆண், இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயது ஆண், குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயது ஆண் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து நாட்டில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 687 ஆக உயர்வடைந்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading