Local

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1876 ஆக அதிகரிப்பு!

COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 06 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தொற்றுக்குள்ளானோர் அனைவரும் கடற்படையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1876 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

தொற்றுக்குள்ளானவர்களில் 715 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 28 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

அதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1150 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading