Gossip

முதலிரவில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவனும் தற்கொலை!

முதலிரவின்போது மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு, கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், சோமஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த நீதிவாசனுக்கும், சந்தியா என்ற இளம் பெண்ணிற்கும் அவர்களது வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் நேற்று திருமணம் நடைபெற்றது.
புதுமண தம்பதிகளுக்கு முதலிரவு என்பதால், இருவீட்டார் பெற்றோரும் வெளியே படுத்திருந்த நிலையில், முதலிரவு அறைக்குள் சந்தியா சென்றுள்ளார்.

சிறிது நேரம் கணவன் – மனைவி இருவரும் பேசிக்கொண்டு இருந்த நிலையில், சற்று நேரத்திலேயே, மாப்பிள்ளை நீதிவாசன் முதலிரவு அறையிலிருந்து வேகமாக வெளியே ஓடி உள்ளார்.

இதனால், அவர்களது உறவினர்கள் முதலிரவு அறையின் உள்ளே சென்று பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அங்கே, மணப்பெண் சந்தியா, கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

அத்துடன், அந்த பகுதியில் உள்ள ஒரு மரத்தில், நீதிவாசன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் மீட்டு பிராதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading