World

கொரோனா தொற்று கண்டறியப்பட்ட இளம் ஊடகவியலாளர் உயிரிழப்பு!

TV5 தொலைக்காட்சி ஊடகத்தில் பணியாற்றிய இளம் ஊடகவியலாளர் மனோஜ் குமாருக்கு, அறிகுறிகள் தெரியவே காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட ஒரே நாளில் மையஸ்தீனியா க்ரேவிஸ் (Myasthenia Gravis) என்னும் நிலை, அதாவது சுவாச வழித்தட தசை உட்பட அனைத்து தசைகளும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருக்கிறார்.
காந்தி மருத்துவமனை துணை சூப்பரிண்டென்ட் அளித்த தகவலில், மனோஜ் குமார் பைலேட்ரல் நிமோனியாவுடனான கோவிட்-19 (Bilateral Pnuemonia with Covid-19) காரணமாக காலை 9.30 மணியளவில் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஏற்கனவே தைமஸ் சுரப்பி அறுவை சிகிச்சை செய்து தைமஸ் அகற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்று கண்டறியப்பட்ட ஒரு நாளில், இளம் ஊடகவியலாளர் உயிரிழந்திருக்கும் இந்த நிகழ்வு, பத்திரிகையாளர்கள் மத்தியில் பயத்தையும், பாதுகாப்பு குறித்த விவாதங்களையும் அதிகப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading