World

கொலை நடந்த இடம் வழியாக வருபவர்களை திட்டித் துரத்தும் ஆவி!

பிரித்தானியாவில் உள்ள ஒரு இடத்தின் வழியாக நடந்து செல்பவர்களை ஒரு பெண்ணின் ஆவி கெட்ட வார்த்தையால் திட்டித் துரத்துவதாக பலர் தெரிவித்துள்ளார்கள்.

இங்கிலாந்திலுள்ள Somerset என்ற இடத்தில், Dead Woman’s Ditch என்று அழைக்கப்படும் இடம் ஒன்று உள்ளது.

1789ஆம் ஆண்டு, Jane Walford என்ற பெண், அந்த இடத்தில் வைத்து தன் கணவனான John என்பவரால் கொலை செய்யப்பட்டார்.

அத்துடன், 1988ஆம் ஆண்டு, Shirley Banks என்ற பெண்ணின் உடல் அதே இடத்தில் கண்டெடுக்கப்பட்டது. அந்த சம்பவம் தொடர்பாக John Cannan என்பவர் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், தற்போது அந்த வழியாக நடந்து செல்பவர்களை, எதிர்பாராத நேரத்தில், திடீரென ஒரு பெண் கெட்ட வார்த்தையால் திட்டி அங்கிருந்து துரத்துவதாக பலர் தெரிவித்துள்ளார்கள்.

வெண்ணிறத்தில் பழங்கால ஆடை அணிந்த ஒரு பெண்ணைப் பார்த்ததாக சிலரும், நீளமான கருப்பு நிற கோட் அணிந்த ஒரு பெண்ணைப் பார்த்ததாக சிலரும் தெரிவித்துள்ளார்கள்.

ஆகவே, ஆவிகளை கண்டுபிடிக்கும் உள்ளூர் குழு ஒன்று உண்மையை அறிவிதற்காக விசாரணையில் இறங்கியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading