Local

இலங்கையில் 70 வயதில் முதுநிலை பட்டம் பெற்ற நபர்!

யாழில் 70 வயதில் நபர் ஒருவர் முதுநிலை பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். இதற்கு பெரும்பான்மையான சிங்கள மக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது 70வது வயதில் பட்டம் பெற்றதனை அவரது மகன் தனது பேஸ்புக் பக்கத்தில் பட்டம் பதிவிட்டுள்ளார்.

“எனது தந்தை தனது 70வது வயதில் M.P.A பட்டம் பெற்றுள்ளார்” என மகன் பதிவிட்டுள்ளார்.

வைத்தியரான மகனின் பேஸ்புக் பக்க பதிவை சிங்கள பேஸ்புக் பக்கங்கள் மீள் பதிவு செய்து வெளியிட்டுள்ளன. அத்துடன் கல்விக்கு வயதில்லை என்பதனை அவர் உண்மையாக்கியுள்ளார் என பலரும் 70 வயதான தந்தையை பாராட்டியுள்ளார்.

எனினும் இந்த கற்கையின் பெறுமதியை இன்றைய காலப்பகுதியினர் மதிக்காமல் பணம் செலுத்தி பட்டங்களை பெற்றுக் கொள்வதாக பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

அதன் மதிப்பை உணர்ந்தவர் வயதை பொருட்படுத்தாமல் சாதித்து காட்டியுள்ளார் என பேஸ்புக் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading