Local

கொள்கலன் சரக்கு கட்டணம் 65% உயர்வு!

அகில இலங்கை கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கலன் கப்பல் கட்டணத்தை 65% அதிகரித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி சரிவு மற்றும் அண்மைய டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் ஒயிலின் விலை உயர்வை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எமது சேவைகளைத் தொடர முடியாத நிலைமைக்கு வந்துள்ளோம்.
எல்லாவற்றையும் கருத்திற்க் கொண்டு, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கலன் கப்பல் கட்டணத்தை 65 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading