Local

வெளிநாடுகளில் ராஜபக்ச குடும்பத்திற்கு சொத்துக்கள் இல்லையாம் நாமல் தெரிவிப்பு!

ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான எந்த ஊழல் மோசடி குற்றச்சாட்டு விசாரணையையும் எதிர்கொள்ள தயார் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ராஜபக்சக்காள் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர் என எதிர்கட்சியினர் மீண்டும் குற்றச்சாட்டுகளை சுமத்த ஆரம்பித்துள்ளனர் என தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச ராஜபக்சாக்கள் எந்த விசாரணைகளையும்எதிர்கொள்ள தயார் என குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கட்சிகள் வெளிநாடுகளில் வழக்கு தாக்கல் செய்து பார்க்கட்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சிகள் ராஜபக்சாக்கள் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்துள்ளனர்-சட்டவிரோதமாக சேமித்த பணத்தை வெளிநாடுகளில் சேமித்து வைத்துள்ளனர் என குற்றம்சாட்டியுள்ளனர் என தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச ஆட்சியில் இருந்தவேளை இதனை அவர்களால் நிரூபிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

2015 இல் நாங்கள் ஆடம்பர கார்கள் குதிரைகள் சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட 18 பில்லியன் டொலர்கள் போன்றவற்றை வைத்திருக்கின்றோம் என தெரிவித்தனர்- அவர்கள் அது குறித்துவிசாரணை செய்தானர் ஆனால் அவர்களால் எதனையும் கண்டுபிடிக்கமுடியவில்லை-மீண்டும்அந்த பொய் குற்றச்சாட்டுகளை சுமத்த ஆரம்பித்துள்ளனர் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading