Local

கொழும்பில் மூன்று ஆபத்தான பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன!

தெமட்டகொட மாளிகாவத்தை கொழும்பு வடக்கில் டெல்டா கொரோனா வைரஸ் ஆபத்து அதிகமாக காணப்படுகின்றது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு நகரில் டெல்டா கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களில் கொழும்பு நகரப்பகுதிக்குள் மாத்திரம் டெல்டா கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட 11அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொழும்பு மாநகர சபையின் தலைமை மருத்துவ அதிகாரி ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

தெமட்டகொட மாளிகாவத்தை கொழும்பு வடக்கு பகுதிகளில் டெல்டா வைரசினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் – இந்த பகுதிகளில் டெல்டா வைரஸ் ஆபத்து அதிகம் என அவர் தெரிவித்துள்ளார்.

நோயாளிகளும் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களும் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading