Local

கொழும்பு பம்பலப்பிட்டியில் பாரிய விபத்து – நடு வீதியில் கவிழ்ந்த பேருந்து

கொழும்பு பம்பலப்பிட்டி டூப்ளிகேஷன் வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து சமிக்ஞைகளை மீறி பயணித்த குறித்த பேருந்தானது தும்முல்லயிலிருந்து வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்தின் போது பேருந்து முற்றாக கவிழ்ந்து சேதமடைந்ததாகவும் லொறியின் முன் பக்கம் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விபத்தில் பெண்கள் இருவர் மற்றும் ஆண்கள் ஐவர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading