கொழும்பு மாவட்டத்தில் ‘வீட்டுக்கு ஒரு பட்டதாரி திட்டத்தை’ முன்னெடுப்பேன்
கொழும்பு மாவட்ட மூவின மக்களின் கல்வித்துறை மறுமலர்ச்சிக்காக என்னால் முடியுமான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு பட்டதாரிகளை உருவாக்கும் எனது திட்டத்தையும் தொடர்ந்தும் கொழும்பு மாவட்டத்தில் முன்னெடுப்பேன். இதில் எவ்வித இன, மத பேதங்களுக்கும் இடமளிக்கமாட்டேன் என புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் (சிலிண்டர் சின்னத்தில்) கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் நௌஸர் பௌஸி தெரிவித்தார்.
கொழும்பு மருதானை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் இக்பால் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய வேட்பாளர் நௌஸர் பௌஸி, கொழும்பு மாவட்டம் சனத்தொகை நிறைந்த ஒரு மாவட்டமாகும். இங்கு சனத்தொகை வளர்ச்சிக்கு ஏற்ப மூவின இளம் சிறார்களும் படிக்கின்ற பாடசாலைகளில் குறைபாடுகள் காணப்படுகின்றன. இந்த குறைபாடுகளை நிவர்த்திப்பதினூடாகவே இளம் சிறார்களுக்கு சிறந்த கல்வியை வழங்க முடியும். தொடர்ந்தும் எம்மால் கல்வியை பு

You must be logged in to post a comment.