Local

கொழும்பு வரும் சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்!

கொழும்பு – ஹொரணை வீதியில் கொஹூவல சந்தியில், பொது போக்குவரத்து பேருந்துகளை தவிர ஏனைய வாகனங்களின் போக்குவரத்துக்களை மட்டுப்படுத்த வீதி அபிவிருத்தி அதிகாரசபை தீர்மானித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை அந்த பாதையின் ஊடாக போக்குவரத்து நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படவுள்ளன.

கொஹூவல மேம்பால நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படுவதினால் வாகனப் போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், வாகன சாரதிகள் முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading