Local

கொவிட்டினால் பாதிக்கப்பட்ட ஐம்பது வயதிற்குட்பட்டவர்களின் உடல் உறுப்புகள் பாதிப்பு!

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட 19 முதல் 49 வயதிற்குபட்டவர்களின் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவது குறித்து ஆய்வொன்று எச்சரித்துள்ளது. கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட ஐம்பதிற்கு வயதிற்குபட்டவர்களில் பத்தில் நால்வர் சிறுநீரக நுரையீரல் மற்றும் உடல் உறுப்புகள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர் என்பது ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

கொரோனாவின் முதல் அலையினால் பாதிக்கப்பட்ட 74000 பேரை ( 19-50) அடிப்படையாக வைத்து பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் போது இது தெரியவந்துள்ளது.கொரோனா வைரஸ் முதியர்வர்கள் பலவீனமானவர்களிற்கான நோய் மாத்திரமில்லை என்பதே இந்த ஆய்வின் மூலம் வெளியாகியுள்ள செய்தி என இந்த ஆராய்ச்சியை முன்னெடுத்த பேராசிரியர் கலும் செம்பிள் தெரிவித்துள்ளார்.

19 முதல் 50 வயதிற்கு உட்பட்டவர்கள் மருத்துவமனைகளிற்கு வருவதையும் பல பாதிப்புகளை அவர்கள் எதிர்கொண்டுள்ளதையும் நாங்கள் காண்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.இந்த வயதினரில் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் ஆகக்குறைந்தது ஒரு உடல்உறுப்பு பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.
அனேகமானவர்கள் சிறுநீரக பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்- பலர் நுரையீரல் – இருதய பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.

ஐம்பது வயதிற்குமேற்பட்டவர்களில் 51 வீதமானவர்கள் ஒரு பாதிப்பையாவது எதிர்கொண்டுள்ளனர், அதேபோன்று 30 முதல் 39 வயதிற்கு உட்பட்டவர்களில் 37 வீதமானவர்களும்,40 முதல் 49 வயதிற்கு உட்பட்டவர்களில் 44 வீதமானவர்களும் ஏதாவது ஒரு உடல்பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.ஆனால் கடுமையான கொரோனா பாதிப்பு உடல் உறுப்புகளை எவ்வாறு பாதிக்கும் என்பது நிச்சயமாக தெரியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading