Local

15 வயது சிறுமியை மசாஜுக்காக ஒன்லைனில் பதிவு செய்தாராம் மாலைதீவின் முன்னாள் அமைச்சர்!

பாலியல் சேவைகளுக்காக இணையத்தில் விற்கப்பட்ட 15வயது சிறுமியின் துஷ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மாலைதீவின் முன்னாள் அமைச்சர் மொஹமட் அஷ்மாலியின் சட்டத்தரணி, தனது வாடிக்கையாளர் ஒன்லைனில் மசாஜுக்கு பதிவு செய்துள்ளதாகவும் அத்தளம் சிறுவர் பாலியல் கடத்தல் வளையத்தின் ஒரு பகுதியாக இருந்தது தெரியாது எனவும் கூறியுள்ளார்.

குறித்த சிறுமி, அஷ்மாலியை தனது குற்றவாளிகளில் ஒருவராக நீதிமன்றில் அடையாளம் கண்டுள்ளார்.

சந்தேக நபர்கள் அனைவரும் 25 ஆயிரம் ரூபா பிணைப்பத்திரத்தை செலுத்திய பின் விடுவிக்கப்பட்ட நிலையில் அவர்களின் கடவுச்சீட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சந்தேக நபர்கள் ஆதாரங்களை அழிக்க எந்தவொரு முயற்சி செய்தாலும் காவலில் வைக்கப்படுவர் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading