Local

கோட்டாபயவை CID கைது செய்ய தடையில்லை – நீதிமன்றம் அதிரடி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த மனுவொன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று (01) நிராகரிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் துறையினர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை விசாரணைக்குட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த விசாரணைகளுக்காக தான் கைது செய்யப்படுவதற்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி கோட்டாபய ராஜபக்ச மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்தநிலையில் குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (01) உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: கோட்டாபயவை CID கைது செய்ய தடையில்லை - நீதிமன்றம் அதிரடி | Former President Gotabaya S Petition Was Dismissed

முன்னதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் கோட்டாபய ராஜபக்சவுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் எதிர்வரும் நாட்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தீவிரம் பெறவுள்ள நிலையில், இம்மாத இறுதிக்குள்ளாக பெரும்பாலும் கோட்டாபய ராஜபக்ச விசாரணைக்குட்படுத்தப்படக் கூடும் என்றும் தெரியவந்துள்ளது.

அத்துடன் அவர் கைது செய்யப்படும் பட்சத்தில் முன்னாள் ஜனாதிபதியொருவர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்படும் முதலாவது சந்தர்ப்பமாகவும் அது அமையக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading