Local

கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் அமெரிக்க புலனாய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்

ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபயவை வெற்றி பெற செய்வதற்காக ஈஸ்டர் குண்டு தாக்குதல் நடப்பட்டதாக ஆசாத் மௌலானா சொன்ன கருத்தை அமெரிக்க புலனாய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்து அப்பாட்டமான பொய்யென நிரூபித்துள்ளதாக சிரேஷ்ட ஊடகவியலாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

கம்மன்பிலவின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே இதனை தெரிவித்துள்ளார். அவரின் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

இரு சர்வதேச அறிக்கைகள்

அமெரிக்காவில் இயங்கும் சிறந்த புலனாய்வு நிறுவனமான எரிடேஜ் பவுண்டேசன் (The Heritage Foundation) ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கு முன்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் அமெரிக்க புலனாய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் | Easter Attack In Sri Lanka Gammanpila Gota

அந்த அறிக்கையை தெற்காசியாவுக்கு பொறுப்பான ஜெப் சுமித் தயாரித்துள்ளார். அதில் 2020 இலங்கையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ச குடும்பத்தில் ஒருவர் வெற்றி பெறுவதோடு நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெறுவார்கள்.

அதனால் அமெரிக்காவின் இலங்கை தொடர்பான திட்டங்களில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என தெரிவித்து அமெரிக்க அரசுக்கு வழங்கியுள்ளார்.

தி வயர் வெளியிட்டுள்ள கட்டுரை

அத்தோடு லண்டன் ஸ்கூல் ஒப் எக்னோமிக் (The London School of Economics) கல்லூரியின் விரிவுரையாளரான இந்தியரான ராஜேஸ் வெனுகோபால் இந்தியாவின் தி வயர் (The wire) என்ற இணையத்தளத்திற்கு 2018 ஆம் ஆண்டு நவம்பர் 09 ஆம் திகதி கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஐக்கிய தேசிய கட்சியில் பிரபலம் நாளுக்கு நாள் குறைவடைந்து செல்வதாகவும் எதிர்வரும் தேர்தலில் படுதோல்வி அடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் அமெரிக்க புலனாய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் | Easter Attack In Sri Lanka Gammanpila Gota

அது மட்டுமல்ல மஹிந்த ராஜபக்சவின் கட்சி எவ்வித கஷ்டமும் இல்லாமல் வெற்றி பெறுவதாக குறிப்பிடுகிறார். இவர் ஈஸ்டர் தாக்குதலுக்கு ஒரு வருடத்திற்கு முன்னரே ராஜபக்ச குடும்பத்தில் ஒருவர் வெற்றி பெறுவார் என்று சொல்லியுள்ளார்.

இரு சர்வதேச ஆய்வுகளை வைத்து தெளிவாக நோக்கினால் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்க நடத்தப்பட்டதாக சமூகத்தில் விதைக்கப்பட்டுள்ள சிந்தனையும் ஆசாத் மௌலானா குறிப்பிட்ட விடயங்கள் சித்திரிக்கப்பட்டதாகும்.

இரு சர்வதேச ஆய்வுகளின் படி கோட்டாபய வெற்றி பெறுவது நிச்சயமாக குறிப்பிட்ட நிலையில் அவருக்காக எதற்கு ஈஸ்டர் தாக்குதல்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading